திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாந்ததம் கருமலை கிராமத்தில் தெற்கு தெருவில் சுமார் 40 குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதிக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர வேண்டி மணப்பாறை – துவரங்குறிச்சி செல்லும் சாலை கருமலை கடை வீதியில் சுமார் 50-க்கும் மே ற்பட்டபொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநந்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லியோ, கருமலை பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் பிரச்சனையை சரி செய்து கொடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலால் மணப்பாறை – துவரங்குறிச்சி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments