திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பாலகிருஷ்ணா பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை துவக்கி வைத்த திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி ந. தியாகராஜனிடம் முறையிட்டதாகவும்,
அது சம்பந்தமாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப்பற்றி தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் மேகலா மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜவகர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments