திருச்சி மாவட்டம் சமயபுரம் ச. கண்ணனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட எஸ்.கல்லுக்குடி சேனையர் கல்லுக்குடி ஐந்தாவது வார்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தெருவிளக்கு இல்லாமல் அச்சத்துடனே வந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சமயபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வழிப்பறி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த இரண்டு நாளாக தெருவிளக்கு இல்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.
ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments