திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகே உள்ள உய்யக்கொண்டான் கால்வாயின் சுமார் 750 மீட்டர் நீளமுள்ள நடைபயிற்சி தளம் மற்றும் சைக்கிள் ஓட்டும் த்தளத்தில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.
மழையின் காரணமாக சுவர் மற்றும் நடைபாதையின் மேற்பரப்பு ஆகியவை சேதமடைந்துள்ளன. தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ள அப்பகுதியை மக்கள் அதிகமாக பயன்படுத்தும் இடமாக இருப்பதால் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மே மாதம் 2018 இல் பெய்த கன மழையில் உய்யக்கொண்டான் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. மநகராட்சி சுவரின் ஒரு பகுதியை சீரமைத்தனர்.
உய்யகொண்டான் கால்வாய் தடுப்பு சுவரில் இருந்து ஆறடி தூரத்தில் அமைந்துள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்பே உடனடியாக இதனை சீரமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IyQSibsRvD11s0WNXsg2A7
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments