திருச்சி மாவட்டத்தில் உப்பிலியபுரம் காவல் நிலைய சரகம், செங்காட்டுப்பட்டி, பச்சைமலை பகுதிகளில் சிலர் அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்துவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 9487464651 மூலம் இரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் உத்தரவின் பேரில் மேற்படி பகுதிகளில் தனிப்படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது, உப்பிலியபுரம், செங்காட்டுப்பட்டி, கீழக்கரையை சேர்ந்த மாணிக்கம் (82) த/பெ வடமலை மற்றும் செங்காட்டுப்பட்டி, தண்ணீர்பள்ளம், கீழக்கரையை சேர்ந்த மாணிக்கம் (50) த/பெ வடமலை ஆகிய இருவரும் அனுமதியின்றி இரண்டு நாட்டுத்துப்பாக்கிகள் (SBML) பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது.
பிறகு, மேற்படி இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த இரண்டு நாட்டுதுப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments