திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இயன்முறை சிகிச்சை பயிற்சி கல்லூரியில் ஐந்தாவது நாளாக இன்று ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட்டது .இதற்காக அதிகாலை 3 மணி முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மருந்து வாங்க பொதுமக்கள் சாலையில் காத்திருந்தனர். முதல் 50 நபர்களுக்கு மருந்து வழங்குவதற்காக ஆவணங்களை சரி செய்து வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் உள்ளே அனுமதித்தனர்.
தினமும் 300 குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்க முடியாது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மணி நேரம் காத்திருந்து அந்த மருத்துவமனைக்கு மருந்து வழங்க முடியாது என கூறுவதில் என்ன நியாயம் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தினமும் 50 நபர்கள் என்றால் அடுத்த நாள் மீண்டும் அடுத்து உள்ள 50 நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் கலைந்து செல்ல மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் வற்புறுத்தியும் அவர்கள் செல்லாமல் காவல் துறையினரிடம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அவர்களை தனியாக வரிசையில் நின்று போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர் .சிறிது நேரம் கழித்து வருவாய் அதிகாரிகள் அடுத்த 50 நபர்களுக்கு மருந்து வழங்கப்படும் என்றனர். அப்போது கூட்டமாக இருந்தவர்கள் வரிசையில் நிற்க ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு தள்ளு முள்ளு ஏற்பட்டு தனிமனித இடைவெளி இல்லாமல் நின்றனர்.அதற்கான முன்பதிவு தற்போது செய்யப்படும் என தெரிவித்து அவர்களின் சான்றுகளை காண்பித்து மருந்துகள் பெறுவதற்கான முன்பதிவு செய்து கொண்டனர்.
தற்போது ரெம்டெசிவர் மருந்து விற்பனை வருவாய் துறை அதிகாரிகள் நேரடி கட்டுப்பாட்டில் வழங்கப்படுகிறது. மருத்துவத் துறை, காவல்துறை, முன் களப்பணியாளர்கள் யாருக்கும் அவசரத்திற்கு மருந்து வேண்டும் என்றாலும் அவர்கள் வரிசையில் வந்து நின்று வாங்க வேண்டுமென மருத்துவர்களையும் வருவாய்துறை அதிகாரி அலட்சிய படுத்துவதாக மருத்துவ சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக வருவாய் துறையினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காரசார விவாதம் தினமும் நடைபெற்று வருகிறது. இதற்கு உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd
Comments