தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய்பேச இயலாத மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றியோர்களுக்கும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோருடையவர்களுக்காக அவர்களது தாய்மார்களுக்கும், விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத, வாய்பேச இயலாத மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் 75 சாதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோருடைய தாய்மார்களுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் அரசு மற்றும் தனியார் தையல் பயிற்சி மையங்களில் தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதுநாள் வரை அரசு துறைகளில் தையல் இயந்திரம் பெறாதவராகவும் இருக்க வேண்டும். மேற்காணும் தகுதியுடைய 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய நபரின் தாய்மார்களும் விண்ணப்பிக்கலாம்.
எனவே, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தையல் பயிற்சி பெற்றதற்கான சான்று, கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments