திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வருகின்ற (28.11.2022)ம் தேதி திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் நடைபெறும் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (28.11.2022) திங்களன்று திருச்சி வருகிறார். அன்றைய தினம் காலை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் வருகை தரும் தமிழக முதல்வர் ‘Stem On Wheels’ திட்டத்தினை தொடங்கி வைக்கவுள்ளார். அன்று மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் நடைபெறாது என மேயர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments