மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வீரசக்தியை ஆதரித்து, மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி பகுதியில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார
திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரை ஆதரித்து கமல் பரப்புரை செய்து புறப்பட்ட பொழுது அருகில் இருந்த ஒரு பெண்மணி கமலின் காலில் ஒரு புத்தகத்தை காதிதங்களை தூக்கி எறிந்து ஆவேசமாக பேசி நியாயம் கேட்டார். இதனால் அந்த இடம் பரபரப்பானது. அந்த பெண்ணை மக்கள் நீதி மைய நிர்வாகிகள் இழுத்துப் பிடித்து வெளியே கொண்டு சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண் சீதா அதிமுக ,திமுக இரண்டும் பாமரனுக்குகாக இல்லை பாமரனை நசுக்குவதாக உள்ளது என பேசிய பொழுது மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவர்கள் அவரை பிடித்து இழுத்து சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments