பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை, 40 அடி பீடம், அந்த வளாகத்தில் குழந்தைகள் பூங்கா, நூலகம் முதலியனவும் அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசு ஆணை அளித்துள்ளது.
இந்த அரசாணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பொன்னாடை போர்த்தி பெரியார் நூல்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments