திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பகளவாடி கிராமத்தில் 30 ஆண்டு காலமாக அரசு நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்த நியாய விலை கடையில் இப்பகுதியில் உள்ள சுமார் 736 குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கி வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான கட்டிடத்தை தனிநபர் ஒருவர் போலியாக பட்டா தன் பெயருக்கு மாற்றி உள்ளதாகவும், இதனால் நியாய விலை கடையை அப்புறப்படுத்த அவர் தினமும் வட்ட வழங்கல் அலுவலருக்கு மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து வட்டார வழங்க அலுவலர் நியாய விலை கடையை இடமாற்றம் செய்வதாக கூறியதைடுத்து ஊர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை சந்தித்து போலியாக தயாரிக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்.
அரசு கட்டிடத்தை தனி நபர் பட்டா மாற்றம் செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments