திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, சர்க்கார் பாளையம், வேங்கூர் முதல் கல்லணை வரையில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. இப்பாதையில், சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் ரோடு மிகவும் சேதம் அடைந்துள்ளது. பொது மக்கள் மிகவும் பாதிப்புகுள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
அதே சமயம் கல்லணை சுற்றுலா தளமாகவும் விளங்கிவரும் காரணத்தினால், அயல் நாட்டவர்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா தளத்திற்கு வருகை புரிய அச்சப்படுகிறார்கள். எனவே இந்த அபாயகரமான சாலையினால் உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்கவும், புதிய சாலையை உடனடியாக அமைத்து தரக்கோரி,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப. செந்தில்நாதன் ஆலோசனையின் பேரில், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments