திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரம் கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் 14ஆம் தேதி மூடப்பட்டது. அதன் பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்ததன் காரணமாக தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் இன்றுவரை(29.06.2021)காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரம் திறக்கப்படாமல் இருக்கிறது.
காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரிகள் அதிகபட்ச வருமானமாக 300 இருந்து 500 ஆக இருக்கிறது .கிட்டத்தட்ட நாற்பது நாட்களை கடந்தும் காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் செய்யாததால் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கக் கூடிய வகையிலும் முடக்ககூடிய வகையிலும் அமைந்திருக்கிறது.
ஆகையால் காந்தி மார்க்கெட் சில்லறை வியாபாரத்திற்க்கு அனுமதி தர வேண்டுமென்று SDPI கட்சி வர்த்தகர் அணி சார்பாக இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments