திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வந்திலிங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கவிதா சதீஷ், துணைத் தலைவராக ரம்யா என்பவர் இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் மீது எழுந்த புகாரின் காரணமாக காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கவிதா தலைமையிலான வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவர் ரம்யா செய்த தவறுகள் காரணத்தால் ஊராட்சி மன்ற தலைவரிடமிருந்த கையொப்பமிடும் அதிகாரத்தை பறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்து விட்டனர். அதன் காரணமாக ஊராட்சி மன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.
எனவே மீண்டும் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments