திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குப் பகுதி செயலாளர் ரபிக் அகமது மாநில குழு உறுப்பினர் தோழர் ஸ்ரீதர் மனுகொடுத்தனர். அந்த மனுவில்…. உய்யங்கொண்டான் ஆற்று கரையோரம் உள்ள பகுதியில் கடந்த 40 வருடங்களாக ஆதிநகர், சாந்தா,
ஷீலா நகர் பகுதியில் குடியிருக்கும் மக்கள் கட்டுமான தொழில் செய்பவர்களாகவும், மற்றும் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களாகவும் இருக்கும் மக்கள் தின கூலியாக வேலை பார்த்து சம்பாதித்த பணத்தில், வங்கியில் கடன் வாங்கியும், வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இதில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் வங்கியில் வாங்கிய கடன் தவணை வட்டியை அடைப்பதற்கே போய் விடுவதால் அவர்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இப்பகுதியில் நாற்பது அடி ரோடு வருவதாகவும், இதற்காக ரோட்டை அளவீடு செய்து வருவதாக அவர்கள் கூறினார்கள். ஆகவே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவர்களது வீடுகளை பாதுகாத்து தருமாறும் கேட்டு
மாவட்ட ஆட்சியருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மனு கொடுத்தனர். குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் பகுதியில் முறையாக பட்டா மற்றும் வீட்டு வரி கட்டியும், மின்சார இணைப்பு பெற்றும் வாழ்ந்து வருகின்றனர். பகுதிக்குழு உறுப்பினர்கள் வள்ளி, ஹரிபாஸ்கர் மற்றும் கிளை உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments