பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இன்று பெட்ரோல் 1 லிட்டர் விலை 98.65 ரூபாயாகவும், டீசல் 1 லிட்டர் 92.83 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்தை எடுத்துரைக்கும் விதமாகவும், மோடி அரசை கண்டித்தும் திருச்சி மாநகர் மாவட்டம் DYFI ஜங்சன் பகுதிக்குழு சார்பாக அரிஸ்டோ ரவுண்டானா பெட்ரோல் பங்க் முன்பு இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து இறுதி சடங்கு செய்வது போல் நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன முழங்கங்கள் எழுப்பப்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments