திருச்சி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் 6 மாதத்துக்கு 12 மருந்தாளுனர் பணி இடங்கள் மாதம் ரூபாய் 12,000 ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளன. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலில் பதிவு செய்து புதுப்பித்திருக்க வேண்டும். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் திருச்சி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், டிவிஎஸ் டோல்கேட், திருச்சி-20 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0431-2333112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் நேர்காணல் வரும்போது ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மூன்றாம் தளத்தில் நடைபெறும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
Comments