Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரசு தலைமை மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர்கள், செவிலியர்கள்

தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9200ஆக இருந்த மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,2300ஆக உயர்ந்துள்ளது. மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோரை தாக்கும் இந்நோயானது தற்போது 30 – 40 வயதுடையவர்களுக்கும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி அண்ணல்காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

மருத்துவiனை முதல்வர் வனிதா தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் பிங்க்நிற பலூனை காற்றில் பறக்கவிட்டு அதனைத் தொடர்ந்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டதுடன், பொதுமக்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்த கையேடுகளையும் வழங்கினர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்… மார்பக புற்றுநோய் குறித்த அச்சத்தை போக்கும் வகையில் இன்று பிங்க் நிற பலூன்களை காற்றில் பறக்கவிட்டோம் என்றும், சுயபரிசோதனை செய்து ஆரம்ப காலத்திலேயே மருத்துவமனைக்கு வந்தால் இந்நோயிலிருந்து முழுமையாக விடுபடலாம். பெண்களுக்கு அதிகமாக புற்றுநோய் வருவதை தடுக்க உடல் பருமனை குறைக்க வேண்டும், உடற்பயிற்சியும் தாய்ப்பால் கொடுப்பது அவசியம் மேலும் லிப்டில் பயணிக்காமல் படிக்கட்டில் நடக்க வேண்டும் என்று கூறினார்.

மருத்துவர்களின் வழிமுறைகளை பின்பற்றினால் நோயின் நிலை அடுத்தகட்டத்திற்கு சென்று உயிரிழப்பு நிகழ்வதை தடுக்க முடியும், அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோயை கண்டறிந்து, ஆரம்ப காலத்திலேயே குணப்படுத்திட மாமோகிராம் கருவி 2 மாதத்திற்குள் நிறுவப்படவுள்ளது. மேலும் அட்வான்ஸ்ட் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லீனார்க் ரேடியோகிராபி மெஷினும் 3 மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். ஆரம்பகாலத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சைஅளித்து நோய் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், உயிர்பலியை தவிர்க்கவும் சுயபரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *