திருச்சி மேலசிந்தாமணி கொசமேடு தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவர் திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக டவுன் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது அவருக்கு பின்னால் நின்றிருந்த வாலிபர் திடீரென அவரது சட்டைப் பையில் இருந்த பணம் ரூபாய் 500 எடுத்து கொண்டு ஒட முயற்சித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த பயணிகள் மற்றும் தாமோதரன் சுதாரித்துக்கொண்டு ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய பிட்பாக்கெட் அடித்த வாலிபர் திருச்சி வரகனேரி பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் மாரியப்பன் மகன் ஜெயந் முரளி வயது 20 என்பதும், குண்டூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தற்போது படித்து வருவது விசாரணையில் தெரிய வந்தது. பிக்பாக்கெட் அடுத்த ஜெயந்த் முரளி மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments