Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் (03.01.2022) நாளை 15 – 18 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி போடப்படும் இடங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொரோனா நோயை தடுக்கும் பொருட்டு 15 – 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தமிழகமெங்கும் அனைத்து மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் 17 சுற்றுகளாக நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் பொருட்டு 15 முதல் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி நாளை முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 15 – 18 வயதுக்குட்பட்ட 126400 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ). திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 2007ஆம் வருடம் அல்லது அதற்கு முன்பாக பிறந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் இதர சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலுக்கிணங்க கோவாக்சீன் தடுப்பூசி மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் 88 சதவீதம் பேர் அதாவது 1902361 நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதில் கோவாவின் தடுப்பூசி 180105 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.

அதனால் சிறார்களுக்கும், சிறார்களின் பெற்றோர்களுக்கும் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஓமைக்கிரான் உருமாறிய கொரோனா தொற்று அதிகரிக்கும் இந்த சூழலில் 15 – 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும், சிறார்களின் பெற்றோர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கோவிட் 19 நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *