Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சிறுகனூர் ஊராட்சியில் இரண்டாயிரம் பனை விதைகள் நடவு விழா

திருச்சி மாவட்டம் சிறுகனூர் ஊராட்சி கொணலை கிராமத்தில் ஏரிக்கரையில் 4 கோடி மரம் வளர்ப்பு திட்டத்தின் ஆதி பனை விதை நடவு இயற்கை திருவிழா நேற்றைய தினம் (29.20.2021) நடைபெற்றது. தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் மாறல் பவுண்டேஷன் அமைப்பு, எம் எம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் & பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தியுள்ளனர்.

இதில் 250 மாணவர்கள் பங்கேற்று 2000 பனை விதைகள் விதைத்துள்ளனர்.
நமது மாநில மரமான பனை மரங்களை மீட்கும் பொருட்டு அதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும் என்றும், நிலத்தடி நீர்வளம் நிலவளம் இயற்கை வளங்களை காத்திடவும்  ஏரிக்கரையில் மண்ணரிப்பைத் தடுத்திடும் வகையில் பனை விதை நடவு திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கீ.சதீஷ்குமார், எம்ஏஎம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் அண்ட் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பீர் முகமது, எம்ஏஎம் ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ரஞ்சித் குமார், MAM பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பன்னீர்செல்வம், மாறல் பவுண்டேஷன்   இந்தியா சேர்மன் விவேகானந்தன், மாநில பொருளாளர் மக்கள் சக்தி இயக்கம் நீலமேகம் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *