திருச்சி மாநகரின் வழியாக செல்லும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான உய்யக்கொண்டான் கால்வாய் கரையை பாதுகாக்க திருச்சி மாநகராட்சி சொட்டுநீர் பாசன வசதியுடன் 600 நாட்டு மரக்கன்றுகளை நட்டுள்ளது.
பாசன கால்வாயை அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து முறைகேடாக பயன்படுத்தியதால் கால்வாய் கரையை ஒட்டிய காலி இடத்தை மரங்களை வளர்க்க நகராட்சி நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.
வார்டு முப்பத்தி ஒன்றிலுள்ள சாலையில் திடக் கழிவுகளை கொட்டுவதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் அடிக்கடி தவறாக பயன்படுத்தப்படுகிறது.பல மாதங்களாக கால்வாய் கரையில் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன இதனைத் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் பெரியார் நகர் அருகே கால்வாய் கரையில் 10 அடி அகலத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான செலவில் வேலி அமைத்தது.
அருகில் உள்ள இரண்டு போர்வெல் மூலம் 600 நாட்டு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தை பராமரிக்க ஒரு தொழிலாளியை நியமித்துள்ளோம் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாசன கால்வாயில் திடக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்ட பகுதி மற்றும் மரம் வளர்ப்பு தடையாக இருக்கும் மக்கள் இந்த இடத்தை அணுகுவதற்கு உதவுவதற்காக வேலி அமைக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு நடைபாதை தளம் கட்டப்பட்டிருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் கூறும்போது, கிடைத்துள்ள இடம் நடைபாதைகளுக்கு மிகவும் குறுகியதாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அங்கு நடை பாதை அமைப்பது மரக்கன்றுகள் வளர்வதற்கு மிகவும் தடையாக இருக்கும் என அதிகாரி மேலும் கூறினார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments