Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி

இந்தியாவின் நவீன சிற்பி முன்னாள் பாரத ரத்னா பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி நம் தமிழ் மண்ணில் சிதரடிக்கப்பட்ட நாள். இந்த நாளில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் உள்ள ராஜீவ் காந்தி திரு உருவ முழுச்சிலைக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமையில், 

ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டெல் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது சமயம் தீவிரவாத எதிர்ப்பு உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஜி முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், திருச்சி கிழக்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முஹம்மது ரஃபி,

மாவட்டச் செயலாளர் பட்டேல் பூக்கடை பன்னீர், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, ஜீவா நகர் மாரிமுத்து, ஜங்ஷன் வார்டு தலைவர்கள் கண்ணன், பெல்ட் சரவணன், லட்சுமி அம்மா, கார்பென்டர் சேகர், கருமண்டபம் ரவி, மார்க்கெட் மாரிமுத்து, ஜிம் விக்கி, அரவிந்தன், மன்சூர், ஆட்டோ பாலு, Gym அரவிந்தன், ராமா ஜியோ சுப்பிரமணி,

தீனா, ராகுல் நித்திஷ், மணிவேல், நரேஷ், சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அவர் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *