20223 ஆம் கல்வி ஆண்டிற்கான மேல்நிலை இரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 258 பள்ளிகளை சேர்ந்த 14,390 மாணவர்களும், 16,520 மாணவிகள் என மொத்தம் 30, 910 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர்.
இதில் 13,520 மாணவர்கள், 16,159 மாணவிகள் ஆக மொத்தம் 29,679 மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 96.02%, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 93.95%, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 97.81 சதவீதமாகும்.
திருச்சி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரம்
11 அரசு பள்ளிகள், 1 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளி, 22 அரசு உதவி பெறும் பள்ளிகள், 8 பகுதி உதவி பெறும் பள்ளிகள், 45 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகள் ஆகும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments