திருச்சியில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். அச்சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியாா் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க அவரது தாயார் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த மருத்துவா் ரவி ஐயங்கார், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சிறுமியின் தந்தை புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார், மருத்துவா் ரவி ஐயங்கார் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments