திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மினி லோடு வேனில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகத்துக்குரிய அந்த வேனை காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சோதனை நடத்தினர். வேனின் மேலே செங்கல்களை அடுக்கி வைத்து தார்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த போலீசார் செங்கல் கல்லை அகற்றி கீழே இருந்த அட்டைப் பெட்டியை பிரித்து பார்த்தபோது அதில் மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வாகனத்தை காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வாகனத்தை கொண்டு வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட பதிவு எண் கொண்ட அந்த மினி அசோக் லைலாண்ட் வேனில் கடத்தி வரப்பட்ட 54 பெட்டிகளிலிருந்த ரூ 6 லட்சம் மதிப்புள்ள பாண்டிச்சேரி மதுபான பாட்டில்கள் 647 பறிமுதல் செய்தனர். காந்தி மார்க்கெட் போலீசார் மதுவிலக்கு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் மதுபானத்துடன் வேனை ஒப்படைத்தனர். வாகனத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC
Comments