Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போக்சோவில் கைதான தாய்-மகனை நீதிபதியிடம் ஆஜர்படுத்த முடியாததால் இரவில் 20 கி.மீ ஊரை சுற்றிய காவல்துறை – சேஸ் செய்த பத்திரிக்கையாளர்கள்

திருச்சி மாநகர பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாம்சன். லால்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.

இவர், மாணவிகள் தங்கி இருக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் விசாரணைக்கு பிறகு கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தலைமையாசிரியர் சகாய ராணி, மகன் மருத்துவர் சாம்சன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருத்துவர் மீது 9 ,10 ,11 ,12 போக்சோ சட்டப்பிரிவு, ஐபிசி 452, 323 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர் மீது குற்றத்தை மறைத்தல் 21 சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் முன் இருவரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை அழைத்து வந்தனர். அங்கு நேரமானதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட முடியாமல் போனது. மகிளா நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் ஆஜர் படுத்த போலீசார் முற்பட்டனர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட முடியாததால் கோர்ட் வளாகத்தில் ஒரு மூலையில் போலீஸ் வாகனத்தை கொண்டு போய் நிறுத்தி வெகு நேரம் காத்திருந்தனர்.

இருவரையும் திருச்சி நீதிமன்றத்திற்கு உள்ளே மகிளா நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்த வந்த பொழுது மகிளா நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதால் தொடர்ந்து விரட்டி படம்பிடிக்க பத்திரிக்கையாளர்கள் முயற்சி செய்தனர். உதவி ஆணையர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விரட்டி ஏன் படம் எடுக்கும் முயற்சி செய்கிறீர்கள் என்று உதவி ஆணையர் கேட்டபோது நீங்கள் முகத்தை மூடி ஏன் இப்படி அங்கும் இங்கும் ஓட வைக்கிறீர்கள் என்று கேட்டனர். உதவி ஆணையர் இருவரையும் இறக்கி நீதிபதியிடம் ஆஜர் படுத்துவதற்கு முன் நீங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் வளாகத்திலிருந்து இருவரையும் எங்கு அழைத்து செல்கிறோம் என்று சொல்லாமல் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் வாகனத்தை தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால் பண்ணை, காவிரி ஆறு, திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, காவிரி ஆறு பாலம் சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஊரை சுற்றி செய்தியாளர்களுக்கு ரூட் கொடுத்து எஸ்கேப் ஆகி வாகன செல்லும் இடத்தை மறைக்கலாம் என நினைத்து போலீஸ் வாகனத்தை ஓட்டினர். காரில் உள்ளே அமர்ந்திருந்த இரண்டு பேரும் தலையில் துணியை மூடிக்கொண்டு முக்காடு போட்டு குனிந்து இருந்தனர்.

போலீஸ் வாகனத்தில் பின்புறத்தில் இருந்த தலைமையாசிரியர் பெண் காவலர் மடியிலேயே படித்துக் கொண்டார். பத்திரிக்கையாளர்கள் பத்துக்கு மேற்பட்டவர்கள் விடாமல் இரண்டு சக்கர வாகனத்தில் இருவரையும் அழைத்து சென்ற சாலை முழுவதும் வாகனத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சென்ற பொழுது நீண்ட நெடுந்தூரம் பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து சென்று கொண்டே இருப்பார்கள் போல என்று நினைக்கத் தோன்றியது. போக்கு காட்டினால் போய் விடுவார்கள் பத்திரிக்கையாளர்கள் என எண்ணிய காவல்துறையினர் டயடுயாகி இதற்கு மேல் நம்மால் சுற்ற முடியாது பத்திரிக்கையாளர்களும் நம்மை விடுவதாக தெரியவில்லை என எண்ணிய காவல்துறையினர் ஒரு வழியாக காந்தி சந்தை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இருவரையும் அடைத்து வைத்தனர்.

திருச்சி நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் மூன்று கிலோமீட்டர் தூரம். அதற்கு 19 கிலோமீட்டர் தூரம் போலீஸ் வாகனத்தில் இருவரையும் வைத்து ஊரையே சுற்றி இரண்டு காந்தி சந்தை காவல் நிலையத்திற்க்கு அழைத்து வந்தார்கள். தாய், மகன் இருவரையும் கைது செய்து காந்தி சந்தை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். காலை நீதிபதியிடம் ஆஜர்ப்படுத்தப்படலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்து காந்தி சந்தை வரும் வரை 15 நிமிடங்கள் திருச்சி மாநகரை பரபரப்புக்குள்ளாகியது போலீஸ் வாகனத்தின் பின்புறம் பத்துக்கு மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தை தொடர்ந்த பொழுது சாலையில் சென்றவர்கள் யாரை விரட்டி படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என கேட்கும் நிலை ஏற்பட்டது.

காவல்துறை ஏன் போக்சாவில் கைதானவர்களை இப்படி பாதுகாக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்து விட்டு அவர்களை வைத்து ஊரையே சுற்றி வந்தது பொதுமக்கள் மத்தியில் நகைப்புக்கு உள்ளாகியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *