திருச்சி அரியமங்கலம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிரன் சின்ஹா. இவர் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் சிம்கார்டு டூப்ளிகேட் வாங்குவதற்காக அவருடைய காரில் வந்துள்ளார். ஆனால் அந்த காரின் மேல் பகுதியில் சைரன் பொருத்தப்பட்டு அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது கன்டோண்மென்ட் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சைரன் பொருத்திய கார் கண்டதும் யாருடைய கார் என விசாரித்தனர். அப்போது வந்த காரின் உரிமையாளர் தன்னை ராணுவ அதிகாரி என்றும், தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் வைத்திருப்பதாகவும் அதற்காக பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் ராணுவ அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. மேலும் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த நிலையில் காரின் மேல் பகுதியில் சைரன் வைத்துக் கொண்டு தன்னை ராணுவ அதிகாரி என்று கூறி ஊரை சுற்றி வந்தது தெரியவந்தது.
இதனையெடுத்து கண்டோண்மென்ட் போலீசார் காரை பறிமுதல் செய்ததோடு, அவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் எதற்காக சைரன் வைத்த வாகனத்தை பயன்படுத்தினார்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments