திருச்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர் முழுவதும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதன் ஒருபகுதியாக திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய உதவி ஆணையர் அஜய்தங்கம் தலைமையில் கண்டோன்மெண்ட் சரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் ரோந்து வாகனங்கள் வந்து காவலர்கள் ஆகிய போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜங்ஷன் மேம்பாலம் அருகே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்தனர்.
இதில் சந்தேகத்திற்கிடமாக இருக்கும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டி வரும் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ரயில்வே ஜங்ஷனிலிருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா வரை வாகன பேரணி நடத்தினர். பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாநகரில் தொடர்ந்து அதிரடி சோதனை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments