திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே எஸ்.புதுக்கோட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் மன்னாரு (எ) மணிகண்டன் (21). சம்பவத்தன்று, இவர் பெருகமணி பேருந்து நிறுத்தம் அருகே, நீளமான பட்டாக் கத்தியை கையில் வைத்து கொண்டு, பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக, அசிங்கமாக திட்டிக் கொண்டு, “நான்தான்டா இந்த ஏரியாவுல பெரிய ஆளு.. எங்கிட்ட யாராவது மோதினா அவங்க தல துண்டா கீழே விழும்..” என்று கத்திக் கொண்டே, அருவாளை தலைக்கு மேலே சுழற்றிக்கொண்டு, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தினர்.
அவர் கையில் வைத்திருந்த வெடிகுண்டு போன்ற ஒரு பொருளை வீசி எறிந்தார். அவரது வீர தீர சாகசங்களை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து அதை ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்திருந்தார். அதையடுத்து, பெட்டவாய்த்தலை காவல் ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார், மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்து நீளமான பட்டாகத்தி ஒன்றும், அவரது மொபைல் ஃபோனையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments