6 மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் 11மற்றும் 12 வயது மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் செய்ததாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் (54) மீது திருச்சி ஜீயபுரம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குழந்தைகளின் பெற்றோர்கள், ஆனந்தன் வீட்டு தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்த நிலையில், இக்கொடுமையான துயரச்சம்பவம் நடந்துள்ளதாக 1098க்கு புகார் வந்துள்ளது.
திருச்சி மாவட்ட குழந்தைகள் நல வாரிய மேற்பார்வையாளர் கலாவதி நடத்திய விசாரணையில், மாணவிகள் பெற்றோர் கொடுத்த புகார் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடிவருகிறார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments