Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காவல்துறை குமுறல் : திகில் திருச்சியை திருப்தியான திருச்சியா மாத்துங்க அய்யா!!

என்ன தலைவரே காலையிலேயே பயங்கர பிஸிபோல அட ஏன் மஹா நைட்டு முழுக்க சரியான தூக்கமே இல்ல, ஏன் ஏதாவது உடல்பாதையா தலைவரே அதெல்லாம் ஒண்ணும் இல்ல மஹா, ஓயாம அலைப்பேசி அழைப்புக்கள்தான். அப்படி என்னதான் தலைபோற பிரச்சனை நம்முடைய நண்பர்கள்தான் ஓ புரிச்சு போச்சு புரிச்சு போச்சு காவல்துறையினர் உங்களை கதறவிட்டுட்டாங்க அப்படிதானே. அதேதான் மஹா அதேதான்… அதுசரி மஹா அது எப்படி அவ்வளவு கரெக்டா சொன்ன தலைவரே உங்களோட சோர்ஸைப்பத்தி எனக்கு தெரியாதா ? நேத்து இந்தியாவின் சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் கால் பதிச்சுச்சு இன்னைக்கு தமிழகத்தின் சூரியன் திருச்சியில் கால் பதிக்க இருக்கு அதனால உங்கள தூங்க விட்டிருக்க மாட்டாங்க சரி சரி சூரியனுக்கான தகவலைச்சொல்லுங்க…

முதலில் நிருபர்கள் காவல்துறையினரை சந்திப்பது பெரிய குதிரைக்கொம்பா இருக்காம், முக்கிய அதிகாரிகளை சந்திக்க முயன்றால் முட்டுக்கட்டை போடுறாராம் ஒரு அதிகாரினு குமுறுறாங்க அதுசரி அவருக்கு அப்படி ஒரு கட்டளை மேலிடம் போட்டிருப்பாங்க அதுவும் சரிதான் ஆனா அந்த MALEலிடம் இவரு அதிக அட்டாச்சுடா இருக்கறதால இந்த FEMALEஐ சந்திக்க கூட முட்டுக்கட்டை போடுறாருனு சான் சருக்கினாலும் முழும் அடி முன்னால் எடுத்து வைக்கும் நிருபரே பொலம்புறாருப்பா என்னோட சர்வீஸ்ல நான் பார்க்காத காவல்துறை அதிகாரிகளானு சலிச்சுகிட்டாரு ரொம்ப மனசுக்கு சங்கடமா இருந்துச்சு. அட ஏன் அதலைவா அவரு ஏதாவுது புறுடா விடப்போறாரு 

மஹா கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு அவரை தெரியும். மேலும் நீ ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க குட்டையன் பொய் சொன்னாலும் சொல்வான நெட்டையன் பொய் சொல்ல மாட்டான். சரி விஷயத்துக்கு வாங்க, நாம சொல்ல வேண்டியதைச்சொல்வோம் மஹா விழுறவங்க காதுல விழுந்தா சரி மேட்டருக்கு வாங்க தலைவரே

திருச்சி மாநகர்ல மொத்தம் 14 காவல்நிலையம் இருக்கு தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது, ஏற்கனவே A, B இரண்டு பிரிவில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது C பிரிவிற்கான பதவி உயர்வுக்கான அறிவிப்பு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதிலென்ன தலைவரே பதவி உயர்வு கிடைச்ச நல்ல விஷயம் தானே, கிடைச்சவங்களுக்கு நல்ல விஷயம் ஆனா நாட்டுக்கு கெட்ட விஷயம் 

நீங்க என்ன சொல்ல வர்றீங்க,14 காவல்நிலையங்களிலும் தற்பொழுது எஸ்.ஐ பற்றாக்குறை தலைவிரித்து ஆடுதான் அதலானலதான் செயின் ஸ்நாச்சிங், ஹவுஸ்ப்ரோக்கிங், வாகன திருட்டு, கஞ்சாவிற்பனைனு கொடி கட்டி பறக்குதான் ரிடையர்டு நிலையில் இருக்குற எஸ்.எஸ்.ஐகளை வச்சுகிட்டு வேலை வாங்க முடியாம தவியாய் தவிக்கிறாங்களாம் மேல் அதிகாரிகள் புதியதாக பணிக்கு வர்ற டைரக்ட் எஸ்.ஐக்கள் பிடிக்க வேண்டியவங்கள பிடிச்சு கொடுக்க வேண்டியத கொடுத்து ஏதாவது விங்க்ல போய் உட்கார்ந்திடுறாங்களாம்.

மேலும் பல ஸ்டேஷன்கள்ல ஆள் பற்றாக்குறை இதுல ஆண்ணா ஓண்ணா முதல்வர் வேற அடிக்கடி திருச்சிக்கு வந்துட்டு மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதால ஒட்டு மொத்த காவல்துறையும் அதுல கவனத்தை செலுத்த வேண்டியிருக்காம். இப்படி ராத்திரிப்பூறா போன் மேல போன் மஹா இன்னைக்கு சி.எம். வர்றாரு அவரு கண்ணுல எப்படியாவது இந்த மேட்டரை கொண்டுபோங்க தலைவரே அப்படி இல்லைனா சி.எம். தொடர்ந்து திருச்சிக்கு வந்து காவலர்கள் குடும்பத்துக்கு நி(தி)தி கொடுத்துகிட்டே இருக்கணும்னு அழுவுறாங்க. மாநிலத்தின் மத்தியில் இருக்கோம் எவன் ஊருக்குள்ள வர்றான் போறான்னே தெரிய மாட்டேங்குது கல்லூரிகளும் பெருத்துடுச்சி ஆள் பற்றாக்குறையால அரண்டு போய் கிடக்கும் ஏதாவது எழுதி திகில் திருச்சியை திருப்தியான திருச்சியா மாத்துங்க தலைவரே என்கிறார்கள் காவல்துறையினர். ஊத வேண்டிய சங்கை ஊதியாச்சு விழறவங்க காதுல விழுந்தா சரி மஹா நான் கிளம்புறேன்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *