Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொடுத்த புகாரை வாபஸ் வாங்க போலீசார் மிரட்டல் – பாதிக்கப்பட்டவர் காயங்களுடன் சடலமாக மீட்பு

பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க போலீஸார்  மிரட்டிய நிலையில் பாழடைந்த கிணற்றில் பாதிக்கப்பட்ட விவசாயி முகத்தில் காயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டார். போலீசார் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே கீழவங்காரம் கிராமத்தில் இடத் தகராறு காரணமாக கடந்த 21 ம் தேதி நீலாவதி என்ற பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் எழிலரசி மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த நீலாவதி மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். 

இச்சம்பவம் குறித்து  பாதிக்கப்பட்ட நீலாவதி கொடுத்த புகார் மீது கடந்த 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், புகாரை வாபஸ் வாங்க சிறுகனூர் காவல் நிலைய எஸ்ஐ முருகையா மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் நீலாவதியின் மகன் பிரகாஷ் காவல்துறை எஸ்பி, ஐஜி ஆகிய உயரதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

  

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நீலாவதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 29 ம் தேதி இரவு சமயபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பிய போது, எஸ்ஆர்எம் மருத்துவமனை அருகே வந்த போது  சமயபுரம் போலீஸார் கிருஷ்ணமூர்த்தியின் இருசக்கர வாகனத்தினை பறித்து கைது செய்ய முயன்ற போது தப்பியோடிய கிருஸ்ணமூர்த்தி பிறகு அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் முகத்தில் காயங்களுடன் சடலமாக சமயபுரம் போலீஸார் மீட்டனர். 

போலீஸார் தனது தந்தையினை அடித்து கொலை செய்ததாக கூறி உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி, மகன், மகள்கள் உறவினர்கள், கிராம மக்கள் என 50 திற்கும் மேற்பட்டோர் எஸ்ஆர்எம் மருத்துவமனை அருகேயுள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *