திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் வடக்கு தெற்கு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எரகுடி வடக்கு பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம் வடக்குப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் அரசியல்வாதிகளின் தலையீட்டால் விவசாயிகளின் நெல்களை கொள்முதல் செய்யவில்லை என்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக வடக்குப்பட்டி பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெல்கொள்முதல் மண்டல மேலாளர் துறையூர் வட்டாட்சியர் மற்றும் துறையூர் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments