Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாண்டிச்சேரி மதுபானங்களை விற்றவர் கைது – 398 பாட்டில்கள், பைக், கார் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, முசிறி சிவகாமி நகர் பகுதியில் சரவணன், (44) த.பெ. சின்னான், மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மதுபானங்களை விற்று வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், மேற்படி பகுதிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமார், உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் கதிரேசன், தலைமையில் தனிப்படையினர் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 398 பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் (சுமார் 245 லிட்டர் மதுபானம்) இருந்துள்ளது.

மேற்படி சோதனையின் போது எதிரியான சரவணன், என்பவரை கைது செய்து, பாண்டிச்சேரி மதுபானங்களை விற்பதற்கு பயன்படுத்திய TN45-R-5494, Tata Sumo White Colour மற்றும் TN47-S-3493, Hero Honda Splender Plus ஆகிய வாகனங்களையும், கைப்பற்றப்பட்ட பாண்டிச்சேரி மதுபானங்கள் மற்றும் அவர்களிடமிருந்த பணம் ரூ.13,530/- ஆகியவற்றை துறையூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து ககுற்ற எண் 504/24, u/s 4(1) (aaa), a(1) (B), a(1)(A) TNP Act-or படி வழக்கு பதிவு செய்து, மேற்படி சரவணன் என்பவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், இது போன்று சட்டவிரோமாக யாரேனும் தங்கள் பகுதிகளில் மதுபானம் விற்பனை செய்யும் பட்சத்தில் உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் 9487464651 என்ற உதவி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *