தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் திருச்சி வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகரத்தின் பொங்கல் தொகுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவை திருச்சி மாவட்ட கௌரவத் தலைவர் சிங்கப்பூர் ஜெய் என்கின்ற ஜெயராம் நித்தியா தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
பின்னர் பொங்கல் பானை, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்கா, நெய், உள்ளடங்கிய பொங்கல் தொகுப்பை நூற்றுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கினார். அது சமயம் விழாவில் மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் டாக்டர் சுரேஷ் மாவட்ட பொருளாளர் கலைமணி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்து விழாவில் சிறப்புரையாற்றினார்கள் நகர பொருளாளர் சங்கர் வரவேற்பு உரை ஆற்றினார்கள்.
மாவட்ட துணை தலைவர்கள் பரமசிவம் சசிகுமார் மாவட்ட துணை செயலாளர்கள் ராஜேஷ் பிரபு சோலைமுத்து மாவட்ட துணை இளைஞரணி அமைப்பாளர்கள் கார்த்திக் ராஜா மோகன் குமார் மற்றும் நகர இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரகுராமன் சின்ன ராஜா ரமேஷ் மனோகரன் பார்த்திபன் சரவணன் மோகன்ராஜ் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக நகரச் செயலாளர் ராஜலிங்கம் நன்றியுரை ஆற்றினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments