பிரபல தனியார் தொலைக்காட்சியின் முசிறி தாலுகா செய்தியாளர் சுரேஷ் முசிறி அரசு மருத்துவமனையில் குண்டர்களால் தாக்குதல் – சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை.
முசிறி இரவு உணவு விடுதியில் நடந்த தகராறில் உணவு விடுதியை அடித்து நொறுக்கி விட்டு முசிறி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர் மற்றும் சூறையாடிய கும்பல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கேள்விப்பட்டு செய்தி சேகரிப்பதற்காக வந்தபோது சூறையாடிய கும்பல் பாதிக்கப்பட்டவர்களை தகாத முறையில் பேசிக்கொண்டிருந்தனர். அதனை பதிவு செய்ய
வீடியோ எடுத்த போது அந்த கும்பல் செய்தியாளரை தாக்கியதோடு செல்போனை அடித்து நொறுக்கி விட்டது. இதுதொடர்பாக அனைவரும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது செல்போனை சரி செய்து அதில் உள்ள வீடியோ ஆதாரங்களை பார்த்தால் உண்மை நிலவரம் புரியும் என செய்தியாளர் கூறியுள்ளார்.என்னை அடித்ததற்காக வீடியோ ஆதாரம் உள்ளது.
மேலும் முசிறி அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தால் உண்மை நிலவரம் புரியும் என்றார். என்னைத் தாக்கிய இருவரும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு அவர்களின் சகோதரியின் மகன்கள் ராஜபாண்டி மற்றும் வழக்கறிஞர் கார்த்தி என்பது குறிப்பிடதக்கது என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments