திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் புங்கனூர், தாயனூர், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்ததுடன், உடைந்தும் காணப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் 15 நாட்களாக மின்சாரம் இல்லாமல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், அறுவடைக்கு தயாராக உள்ள 370 ஏக்கர் பரப்பிலான நெல் மற்றும் மக்காச்சோளம் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் சாலைகள் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி மக்கள் பரிதவித்து வருகின்றனர். விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரிய அதிகாரிகளும் விவசாயிகள் புகார் அளித்தும் கண்டும் காணாமல் இருப்பதுடன் மின்கம்பம் மாற்றம் செய்ய 27 ஆயிரம் பணம் கேட்பதாகவும் விவசாயிகள் வேதனையுடன் குறிப்பிடுகின்றனர்.
மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் எப்பொழுது மின்கம்பங்களை மாற்றி அமைத்து எங்களுக்கு மின்சாரத்தை கொடுப்பார்கள் என்ற கவலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் எங்களிடம் மின்கம்பங்களை எடுத்து வரக்கூடிய வசதி இல்லை.
எப்போது எடுத்து வந்து மின்கம்பங்களை மாற்றி தருவார்கள் என்ற கேள்விக்கு பதிலை அவர்களிடம் இருந்து வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments