Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ரோட்டிலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்- திருச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்!! 

துவாக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அமிர்தவள்ளி என்ற பெண் 108 ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்பட்டார்.

 மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது வலி அதிகமாக ஏற்பட்டு திருவரம்பூர் பஸ் நிறுத்தம் அருகிலேயே வண்டி ஓரங்கட்டப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அமிர்தவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

பின்பு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் சேர்க்கப்பட்டனர். Emt ராஜ்குமார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சந்திரசேகர் இருவரின் சமயோஜிதத்தால் இரு உயிர்களுமே நலமாய் மீட்கப்பட்டுள்ளனர்.

108 அவசர ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *