சென்னை மெரினா கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை வீரர்களுக்கு ஜனாதிபதியின் வீரதீர விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழ்நாட்டில் மொத்தம் ஏழு பேருக்கு விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தை சார்ந்த சு.குணசேகரபாண்டியன் என்பவரும் ஒருவர். ஜனவரி 2021 மெரினா கடலில் மீன் பிடிக்க சென்ற 5 மீனவர்கள் கடலில் இருந்து திரும்பி வரும்பொழுது படகு கவிழ்ந்தது. அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படை வீரர்கள் மீனவர்களை தத்தளிப்பதை கவனித்தனர்.
உடனே அங்கு தயாராக இருந்த வீரர்கள் கடலுக்குள் நீந்தி சென்று அங்கு தத்தளித்த மீனவர்களை உயிருடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட மீனவர்கள் நலமுடன் உள்ளார்கள். உரிய நேரத்தில் சிறப்பாக செயல்பட்டு 5 மீனவர்களையும் காப்பாற்றிய மீட்புப் படை வீரர்களுக்கு பாராட்டுகளும், நற்பணி சான்றிதழ்களும், பரிசு தொகையும் குவிந்தன.
இந்த மீட்புச்செயலை அங்கீகரிக்கும் விதமாக மராட்டிய மாநிலம் நாக்பூர் தீயணைப்பு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராவ், திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த தீயணைப்பு வீரர் சு.குணசேகரபாண்டியன் என்பவருக்கு ஜனாதிபதியின் வீரதீர பதக்கமும் பாராட்டு பத்திரமும் வழங்கப்பட்டது.
தீயணைப்புத்துறை இயக்குநர் அபாஷ்குமார், மத்திய மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் மாவட்ட அலுவலர் திருச்சி, அனுசுயா வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments