Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லாரியை முந்தி சென்ற தனியார் பேருந்து – சாலையோரம் இருந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி!!

Advertisement

தஞ்சை மாவட்டம் வரகூர் அருகே சாலையோரத்தில் மின்கம்பி உரசியதில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண் உட்பட 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 10 பேர் காயமடைந்து திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

தஞ்சை கல்லணையிலிருந்து தஞ்சை நோக்கி கணநாதன் என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. வரகூர் அருகே பேருந்து முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது சாலை விரிவு படுத்துவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சாய்ந்தது. இதில் சாலை ஓரமாக சென்ற மின்சார கம்பி பேருந்து மீது உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்தில் பயணம் செய்த கவிதா, முனியம்மாள், நடராஜன், கல்யாணராமன் மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

Advertisement

மேலும் 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் மின்கம்பி உரசி 5 பேர் பலியானோர் விவரங்கள் கணேசன் வயசு (50) கருப்பூர், கல்யாணராமன் வயசு (65) வரகூர், கௌசல்யா வயசு (35) வரகூர், நடராஜ் விழுப்பானகுறிச்சி, அரியலூர் முனியம்மா வயது (65)சேந்தலை.

தற்போது சம்பவ இடத்துக்கு மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் விரைந்துள்ளார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *