திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா் தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு நிலைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.
இம்முகாமில் பங்கேற்கும் நபா்கள் தங்களது கல்விச்சான்று, மதிப்பெண் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 புகைப்படத்துடன் வர வேண்டும். இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் தங்களது தேவை குறித்த விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவே தெரிவிக்கலாம்.
மேலும், முகாமில் திறன் பயிற்சி மையங்கள் மூலம் இலவச திறன்பயிற்சிக்கு ஆள்களும் தோ்வு செய்யப்படவுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக்ததை நேரிலோ, 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments