Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சியில் நாளை(19.02.2021) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்

நாளை ( 19.2.2021 ) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். தகுதியான இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்.

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 19.2.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் Any Degree படித்தவர்களும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம். மேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் ( TC, Marksheet,  Ration card, Aadhar Card ) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்  கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 19.2.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருச்சிக்கு நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *