திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் முன்னிலையில் 168 பள்ளிகளைச் சேர்ந்த 816 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பள்ளி வாகனங்களில் ஏறி ஆய்வு மேற்கொண்டதில் சோதனையில் வாகனங்களில் உள்ள அவசரகால வெளியேறும் வழியை திறக்க சிரமப்பட்டதாலும், சுத்தியல் இல்லாததாலும் ஆட்சியர் வாகன ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஒரு சில பள்ளி வாகனங்களில் அவசரகால மருத்துவ பெட்டகம் இல்லாமல் இருந்ததை கண்டு வாகன ஓட்டுனர்களுக்கு உடனே அதனை வைக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது 153 பள்ளி வாகனங்கள் தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கிவந்தது கண்டறியப்பட்டு, தகுதி சான்றிதழ் புதுப்பித்துக் கொள்ள காலக்கெடு விடுக்கப்பட்டது. அவ்வாறு உரிய காலத்தில் தகுதி சான்றிதழ் பெறாத வாகனங்கள் உரிமத்தை ரத்து செய்யவும் ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் ஆய்வு பிறகு அங்கிருந்து கிளம்பியதும் வாகனங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறிச் சென்றது.
மாவட்ட ஆட்சியிற்காக பெயரளவில் மட்டும் ஆய்வினை மேற்கொள்ளாமல் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்நிகழ்ச்சிக்காக காலை 06:00 மணிக்கு வந்த பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் வந்து சென்ற சிறிது நேரத்திலேயே அனைத்து வாகனங்களும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை விரைவாக செய்து அனைத்து வாகனங்களையும் சிறிது நேரத்திலேயே அனுப்பி வைத்தது மாவட்ட ஆட்சியருக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பெயர் அளவிற்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டதா?
தனியார் பள்ளியில் பயிலும் அரசு அதிகாரிகள் குழந்தைகள் அவர்களது காரில் பாதுகாப்பாக செல்கின்றனர். மற்ற குழந்தைகள் பள்ளி வாகனத்தில் செல்வதற்கு பணம் செலுத்தியும் இப்படி பாதுகாப்பு இல்லாத வாகனத்தில் செல்ல வேண்டுமா? முறையாக போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழும்பி உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments