திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வரும் (19.05.2023) வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த அனைவரும் (வயது வரம்பு : 18-க்கு மேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.
மேற்படி நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு (சுநளரஅந) நகல்கள் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் (19.05.2023) வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகை புரிந்து பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
385
12 May, 2023







Comments