Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.

மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழிற்பயிற்சிகளுக்கான பயனாளிகள் தேர்வு நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்திட்ட அலுவலகம் ஆகியவைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் வரும் 6ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மத்திய பேருந்து நிலையம்கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், பெரம்பலுார், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் வேலை வாய்ப்பளிக்கும் தனியார் நிறுவனங்கள் (https://forms.gle/Tnq4eXzS1nLspcos6) என்கின்ற வலைதள இணைப்பில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் (https://forms.gle/kcwsT2Kngt3q7QLy7) வலைதள விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் அல்லது உரிய ஆவணங்களான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை (UDID), ஆதார் அட்டை, கல்விச்சான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணி அனுபவச்சான்று மற்றும் தன் விபரம் குறிப்பு (Bio Data) ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளிலும் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம். 

மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0431-2412590, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலை பேசி எண் 0431-2413510 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவலை பெற்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *