திருச்சி மாவட்டத்திலுள்ள வேலை நாடுனர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 30-ந் தேதி திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில் நுட்ப பயிலகத்தில் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர் களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இந்த முகாமில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐடி டிப்ளமோ செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல் வித்தகுதியுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை தேடு பவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை தேடுபவர்கள், தமிழ்நாடு அரசின் https://www.tnprwatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510, 9499055901, 9499055902 திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத் தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments