திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக நாளை (06.10.2021 ) புதன்கிழமை மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் கூடி திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது.
மேலும் காவிரி ஆற்றின் அனைத்து கரைப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிடும்படி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments