R & R செயற்கை கை, கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொறுத்துதல் மையம் சார்பில் செயற்கை கை, கால் உறுப்புகள் பயனாளிக்கு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி இருங்களூர் அருகே உள்ள SRM மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு செயற்கை கை, கால் உறுப்புகள் வழங்கப்பட்டன. அந்த செயற்கை கை, கால்களை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எஸ்ஆர்எம் மருத்துவமனையின் தலைவர் சிவக்குமார் மற்றும் R & R செயற்கை கை கால் உறுப்புகள் உற்பத்தி மற்றும் பொருத்துதல் மைய தலைவர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு செயற்கை உறுப்புகளை வழங்கினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments