கடந்த ஜுலை 19ம் தேதி திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது . இதையடுத்து திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள வீட்டில் செயின் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தை சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர்.
வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்த பொழுது இந்த ஸ்பா முழுவதும் உரிமை பெறாமல் பல ஆண்டுகளாக நடைபெறுவது தெரியவந்துள்ளது. அங்கிருந்து 2000 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலாளர் லட்சுமி தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் இவர் தளபதி விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் மேலாளர் லட்சுமி தேவி ஸ்பாவின் உரிமையாளர் செந்தில் குறித்த தகவல்களை காவல்துறையிடம் கொடுத்தது அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.
இவர் மீது திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்பொழுது கைது செய்துள்ளனர்.ஏற்கனவே இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்ட பிறகு தான் இவருடைய பதவி பறிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் செயல்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் உதவி ஆய்வாளர் கைதின்போது தெரிவித்திருந்தனர். தற்பொழுது ஷைன் ஸ்பா உரிமையாளர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஸ்பாக்களிலும் ரெய்டு நடைபெற்று உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர்கள் குறித்த தகவல்களோ கைது சம்பவங்களும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவரை மட்டும் கைது செய்தற்க்கு காரணம் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments